தமிழ் மன்றம்

முக்காலமும் நின்று வாழும் மூப்பிலா முத்தமிழுக்கு எங்கள் முதல் வணக்கம்!

நமது ராம்கோ கல்லூரியில், இன்றைய உலகதேவைகளுக்கு ஏற்றாற்போல் மாணவர்களை தயார்படுத்த அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அறிவு போதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பன்முக திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே பல மன்றங்கள்.அவற்றுள், உலகின் மிகவும் தொன்மையான மூத்த மொழியாக கருதப்படுவதும், வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றிலிருந்தும் ஒவ்வொரு எழுத்து எடுத்து 'தமிழ்' என பெயர் சூட்டப்பட்ட நம் உயர்தனிச் செம்மொழியின் பெருமைகளை பறைசாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்மன்றம். அம்மன்றத்தின் செயல்பாடானது இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், மொழிஆளுமையை மேம்படுத்திக்கொள்வதற்கும் பற்பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

ம. சந்தன மருது பாண்டியன் (ஆசிரிய ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்)
உதவிப்பேராசிரியர், இயந்திரவியல்த்துறை.

நிகழ்வுகள் (2017– 2018) :

நமது கல்லூரி தமிழ் மன்ற மாணவர்களுக்கு “உயர்தனிச்செம்மொழி” எனும் தலைப்பில் 15.03.18 அன்று கவிதை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

நமது கல்லூரி வளாகத்தில், தமிழ் மன்ற மாணவர்கள் முன்பு 28.03.18 அன்று‘சாகித்ய அகாதமி’ விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன், “உயர்தனிச் செம்மொழி”எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.